கழிவுநீர் மற்றும் திடக் கழிவுகளின் சுத்திகரிப்புக்கான புதிய தொழில்நுட்பம்: சிஐஎஸ்ஆர் – ஐஐசிடி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
- September 4, 2021
- jananesan
- : 546
கழிவுநீர் மற்றும் கரிம திடக் கழிவுகளின் ஒருங்கிணைந்த சுத்திகரிப்புக்கான புதிய உயர் விகித உயிரி-மீத்தேனேற்ற தொழில்நுட்பத்தை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஐஎஸ்ஆர்) – இந்திய ரசாயண தொழில்நுட்ப கழக(ஐஐசிடி) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
கழிவுநீர் மற்றும் கரிம திடக் கழிவுகளின் ஒருங்கிணைந்த சுத்திகரிப்புக்கான புதிய உயர் விகித உயிரி-மீத்தேனேற்ற தொழில்நுட்பம் மற்றும் இணை உற்பத்தியாக வரும் உயிரி எரிவாயு மற்றும் உயிரி உரம் ஆகியவை நிலத்தடி நீர் மற்றும் கழிவு நீரை குடிநீராக்கும். இந்த தொழில்நுட்பத்தை நாட்டின் பல பகுதிகளில் கழிவு நீர் மற்றும் கரிம திட கழிவு சுத்திகரிப்புக்கு பயன்படுத்த முடியும்.
சிஎஸ்ஐஆர்-ஐஐசிடி விஞ்ஞானிகள் டாக்டர் ஏ. கங்காக்னி ராவ், டாக்டர் எஸ்.ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து இந்த உயிரி மீத்தேனேற்ற தொழில்நுட்பத்தை, ஏஜிஆர் (ஆக்ஸிஜன் இல்லா வாயு) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம் கரிம திட கழிவுகளை சுத்திகரிக்க முடியும். அதோடு நேனோ வடிகட்டுதல் அமைப்புடன் இணை உற்பத்தியாகும் உயிரி வாயு, உயிரி உரம் ஆகியவை கிடைக்கிறது.
இந்த ஏஜிஆர் மற்றும் நேனோ வடிகட்டுதல் தொழில்நுட்பங்கள் களத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளன. இந்த தொழில்நுட்பம் மூலம் 50,000 முதல் 1 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பயனடைய முடியும் என டாக்டர் ராவ் மற்றும் டாக் ஸ்ரீதர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
திட கழிவுகளையும், கழிவுநீரையும், பொதுவான சுத்திகரிப்புக்கு அனுப்புவதற்கு பதில், இந்த தொழில்நுட்பம் மூலம் கழிவுகளை சேகரிக்கும்
இடத்திலேயே சுத்திகரிக்க முடியும். இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையை நாட்டின் எந்த பகுதியிலும் பயன்படுத்த முடியும். 2 முதல் 4 மில்லியன் லிட்டர் கழிவு நீர் மற்றும் 5 முதல் 10 மெட்ரிக் டன் திட கழிவு சேகரிக்கும் இடங்களில் இந்த தொழில்நுட்பம் மூலம் சுத்திகரிக்க முடியும்.
Leave your comments here...