கொரோனா தடுப்பு விதிமுறைகள் தீவிரமாக பின்பற்ற மத்திய அரசு உத்தரவு.!

இந்தியா

கொரோனா தடுப்பு விதிமுறைகள் தீவிரமாக பின்பற்ற மத்திய அரசு உத்தரவு.!

கொரோனா தடுப்பு விதிமுறைகள் தீவிரமாக பின்பற்ற மத்திய அரசு உத்தரவு.!

பண்டிகை காலம் வருவதையொட்டி,கோவிட் பரவல் தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக பின்பற்ற நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

பண்டிகை காலம்நாடு முழுதும் தொடர்ந்து நான்கு நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, அனைத்து மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்கள் தவிர தேசிய அளவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

ஆனால், சில மாவட்டங்களில் பாதிப்பு குறையாமல் நீடித்து வருவது கவலை அளிக்கிறது. பண்டிகை காலம் வருவதால் அதிக கூட்டம் கூடுவதை தடுக்க வேண்டும். தேவைப்பட்டால் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கலாம். பரிசோதனை, தொடர் கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி, கொரோனா பரவல் தடுப்பு விதிமுறை ஆகிய ஐந்து அம்சங்களை தொடர்ந்து திறம்பட நிர்வகிக்க வேண்டும்.

பரிசோதனைமாநில அரசுகள் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பாதிப்பில்லாத அல்லது குறைந்த பாதிப்பு உள்ள பகுதிகளில் பரிசோதனை, கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.

கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தும்படி மாவட்டம் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கு மாநில அரசுகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படாத பகுதிகளுக்கு, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை பொறுப்பாக்க வேண்டும். இது தொடர்பாக மாநில அரசுகள் பிறப்பிக்கும் உத்தரவு, மக்கள், களப் பணியாளர்கள் உள்ளிட்டோரை சென்றடைவதை உறுதி செய்வதன் வாயிலாக கொரோனா பரவலை தடுக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...