ஆன்மிகம்
வலம்புரி விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா..!
- August 22, 2021
- jananesan
- : 726

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யூர் கவி நகரில், அமைந்துள்ள ஸ்ரீவலம்புரி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க ,கணபதி ஹோமம், கோபூஜை, மற்றும் விசேஷ பூஜையும் நடந்தது.
தொடர்ந்து, கடம் புறப்பாடாகி, அழகர்கோவில், ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து பின் ,கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், பக்தர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை , அய்யூர் கவி நகர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Leave your comments here...