தமிழகம் உட்பட, நாட்டின் ஊரகப் பகுதிகளில் உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள்..!
தமிழகம் உட்பட, நாட்டின் பல ஊரகப் பகுதிகளில் உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக, மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்தள்ளார்.
அவர் மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது: உணவு பதப்படுத்துதல் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தை, உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ்
(i) மிகப் பெரிய உணவு பூங்கா,
(ii) ஒருங்கிணைந்த குளிர் பதன கிடங்குகள் மற்றும் மதிப்பு கூட்டல் உள்கட்டமைப்பு,
(iii) உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்புத்திறன் உருவாக்கம் /விரிவாக்கம்,
(iv) வேளாண்-பதப்படுத்தும் தொகுப்புகளுக்கான உள்கட்டமைப்பு,
(v) பின்தங்கிய மற்றும் முன்னோக்கிய இணைப்புகளை உருவாக்குதல்
(vi) உணவுப் பாதுகாப்பு மற்றும் தர உறுதி உள்கட்டமைப்பு, (vii) மனித வளம் மற்றும் நிறுவனங்கள்,
(viii) பசுமை செயல்பாடுகள் என்ற பிரிவுகள் உள்ளன.
இந்தத் திட்டங்கள் மூலம் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு, மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம், கடனுதவி அளிக்கிறது.
தமிழகத்தின் ஊரகப் பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் பிரதமரின் கிசான் சம்மதா திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது வரை 41 மெகா உணவுப் பூங்காங்கள், 353 குளிர் பதனத் திட்டங்கள், 63 வேளாண் பதப்படுத்தும் தொகுப்புக்கள், 292 உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், 63 பின்தங்கிய மற்றும் முன்னோக்கிய இணைப்புத் திட்டங்கள், 6 பசுமை திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இவற்றில் 1 மிகப் பெரிய உணவு பூங்கா திட்டம், 17 குளிர் பதனத் திட்டங்கள், 10 வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகள், 22 உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், 9 பின்தங்கிய மற்றும் முன்னோக்கிய இணைப்புத் திட்டங்கள் மற்றும் 20 உணவு பரிசோதனை மையங்கள் ஆகியவை தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
பசுமை செயல்பாடு திட்டம் தக்காளி, வெங்காயம் மற்றும் உருளை கிழக்கு ஆகியவற்றை விளைவிக்கும் விவசாயிகளுக்கு நிலையான விலை கிடைக்கவும், அறுவடைக்கு பிந்தை இழப்புகளைத் தவிர்க்கவும், உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் திறனை அதிகரிக்கவும், பசுமை செயல்பாடு திட்டம், கடந்த 2018ம் ஆண்டு உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
இத்திட்டம் குறுகிய கால தலையீடாக, 50 சதவீதப் போக்குவரத்து மற்றும் சேமிப்பு மானியத்தை அளிக்கிறது. நீண்ட கால தலையீடு மூலம், தகுதியான ஒரு திட்டத்துக்கு 35 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மானியம் அளிக்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு திட்டத்துக்கு ரூ.50 கோடி மதிப்பில் இருக்கலாம்.
இத்திட்டம் வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள், வேளாண் தொடர்பான பொருட்கள் மற்றும் பதப்படுத்துல் வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட உற்பத்தித் தொகுப்புகளில், 6 திட்டங்கள் ரூ.363.30 கோடி செலவில் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான மானியம் ரூ.136.82 கோடி. இதன் மூலம் 6 உற்பத்தி தொகுப்புகளில், 31 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு தலா ஒரு திட்டம், மகாராஷ்டிராவில் வெங்காயத்துக்கு 2 திட்டம், ஆந்திராவில் தக்காளிக்கு ஒரு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2021-22 நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, பசுமை செயல்பாடுகள் திட்டம், எளிதில் வீணாகக்கூடிய 22 பொருட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
Leave your comments here...