ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருமானம் ரூ.55.5 கோடி – திருப்பதி தேவஸ்தானம் தகவல்

ஆன்மிகம்

ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருமானம் ரூ.55.5 கோடி – திருப்பதி தேவஸ்தானம் தகவல்

ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருமானம் ரூ.55.5 கோடி – திருப்பதி  தேவஸ்தானம் தகவல்

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜூலை மாதம் கிடைத்த வருமானம் குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

“திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 5 லட்சத்து 32 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஜூலை மாத உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.55 கோடியே 58 லட்சம் கிடைத்தது. இ.உண்டியல் மூலமாக ரூ.3 கோடியே 97 லட்சம் கிடைத்தது.

35 லட்சத்து 26 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 7 லட்சத்து 13 ஆயிரம் பக்தர்களுக்கு தறிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக வழங்கி உள்ளனர். அதேபோல் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கடந்த ஜூலை மாதம் இ.உண்டியல் மூலமாக ரூ.15 லட்சம் கிடைத்தது.” கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...