திருப்பதியில் மீண்டும் வாடகை அறைகளுக்கு முன் பணம் செலுத்தும் முறை அமல்.!

ஆன்மிகம்இந்தியா

திருப்பதியில் மீண்டும் வாடகை அறைகளுக்கு முன் பணம் செலுத்தும் முறை அமல்.!

திருப்பதியில்  மீண்டும் வாடகை அறைகளுக்கு முன் பணம் செலுத்தும் முறை அமல்.!

திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் தங்குவதற்காக தேவஸ்தானம் சார்பில் திருமலையில் வாடகை அறைகள் கட்டப்பட்டு உள்ளன.இதில் 100 முதல் 15,000 வரை வாடகை அறைகள் உள்ளன. இந்த அறைகளை பக்தர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

இதற்காக 6 இடங்களில் சிறப்பு கவுண்டர்களை தேவஸ்தானம் நிறுவியுள்ளது. இதற்கு முன்பு அறை வாடகை எடுக்கும் பக்தர்களிடம் அறை வாடகை உடன் கூடுதலாக ஒரு நாள் வாடகை முன்பணமாக தேவஸ்தானம் வசூல் செய்து வந்தது. பக்தர்களிடம் முன் பணம் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் முன்பணம் பெரும் முறையை தேவஸ்தானம் ரத்து செய்தது.

பக்தர்கள் வாடகை அறையின் கட்டணத்தை மட்டும் செலுத்தி அறைகளை பெற்று பக்தர்களிடம் வாடகையுடன் கூடுதல் பணம் பெறாததால் அறையை காலி செய்யும் பக்தர்கள் தேவஸ்தானத்திடம் அறை சாவியை ஒப்படைக்காமல் சென்றுவிடுகின்றனர். இதனால் தேவஸ்தானத்திற்கு இழப்பு ஏற்பட்டு வந்தது.இழப்பை சரி செய்யும் வகையில் அறைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தேவஸ்தானம் முடிவு செய்தது.

தற்போது தேவஸ்தான கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவும், விரிவாகவும் நடைபெறுவதால் நேற்று முன்தினம் முதல் மீண்டும் அறை வாடகைக்கு முன் பணம் பெறும் முறையை அமல்படுத்தி உள்ளது.ரூ.500 க்கு குறைவாக உள்ள அறைகளுக்கு ரூ.500-ம் அதற்கு மேற்பட்ட வாடகை உள்ள அறைகளுக்கு இரட்டிப்பு தொகையை முன்பணமாக பெறப்படுகிறது.

Leave your comments here...