ஜம்மு-காஷ்மீர் எல்லையில் கடந்த ஜூன் வரை 664 அத்துமீறல்கள்.!

இந்தியா

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் கடந்த ஜூன் வரை 664 அத்துமீறல்கள்.!

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் கடந்த ஜூன் வரை 664 அத்துமீறல்கள்.!

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்தாண்டில் ஜூன் வரை, பாகிஸ்தான் 664 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் தநித்யானந் ராய் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் கடந்த 2018ம் ஆண்டு 2140 முறையும், 2019ம் ஆண்டு 3479 முறையும், 2020ம் ஆண்டு 5,133 முறையும், 2021ம் ஆண்டில் ஜூன் வரை 664 முறையும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவத்தினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் பதிலிடி கொடுத்தனர்.

ஜான்சி ரயில் நிலையம் பெயர் மாற்றம்:

உத்தரப் பிரதேசம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள ஜான்சி ரயில் நிலையத்தின் பெயரை ‘வீராங்கனை லட்சுமிபாய் ரயில் நிலையம்’ என பெயர் மாற்றக் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. விதிமுறைப்படி, இது குறித்து அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த கருத்துக்கள் வந்தபின், இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

எல்லையில் வேலி:

இந்தியா- பாகிஸ்தான், இந்தியா-வங்கதேசம், மற்றும் இந்தியா-மியான்மர் எல்லைகளில் வேலிகள் அமைக்கப்படுகின்றன. சர்வதேச எல்லையில் இதுவரை 5187 கி.மீ தூரத்துக்கு வேலைகள் போடப்பட்டுள்ளன. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 2041 கி.மீ தூரத்துக்கும், இந்தியா- வங்கதேச எல்லையில் 3141 கி.மீ தூரத்துக்கும் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave your comments here...