இனி விவேகானந்தர் பாறைக்கு செல்ல படகுகளுக்காக காத்திருக்கவேண்டாம் : ரூ.37 கோடியில் வருகிறது தொங்கு பாலம்..!

தமிழகம்

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எம்.எல்.ஏ., க்கள் கலந்து கொண்டனர்,கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே 140 மீட்டர் தூரத்திற்கு தொங்கு பாலம் அமைக்கப்படும்இதற்காக ரூ.37 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கடலுக்கு நடுவே பாலம் அமைக்க வேண்டியிருப்பதால் சென்னை ஐஐடி பேராசிரியர்களின் கருத்துகளையும் கேட்டுள்ளோம். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சுற்றுலா மாளிகை கட்டப்படும். நெல்லையில், ரிங் ரோடு அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும்’. இவ்வாறு அமைச்சர் பேசினார்

Leave your comments here...