ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முதன்முறையாக வங்கதேசத்திற்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்.!

இந்தியாஉலகம்

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முதன்முறையாக வங்கதேசத்திற்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்.!

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முதன்முறையாக வங்கதேசத்திற்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன்  விநியோகம்.!

இந்திய ரயில்வேயின் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கின்றன.

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அண்டை நாடுகளுக்கு பயணிப்பது இதுவே முதல் முறையாகும். 200 மெட்ரிக் டன் மருத்துவப் பிராணவாயுவை வங்கதேசத்தின் பேனாபோலிற்கு எடுத்துச் செல்வதற்காக தென்கிழக்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் சக்ரதர்பூர் பிரிவில் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
10 கொள்கலன்களில் 200 மெட்ரிக் டன் மருத்துவப் பிராணவாயுவை நிரப்பும் பணி 09.25 மணிக்கு நிறைவடைந்தது.

இந்திய மாநிலங்களுக்கு தேவைப்படும் மருத்துவப் பிராணவாயுவை கொண்டு சேர்ப்பதற்காக கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை நாடு முழுவதும் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் 15 மாநிலங்களுக்கு 480 ரயில்களில் சுமார் 35,000 மெட்ரிக் டன் பிராணவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...