ரஷ்யாவின் மேக்ஸ் சர்வதேச விமானக் கண்காட்சி : முதல்முறையாக இந்திய விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் சாகசக் குழு பங்கேற்பு
ரஷ்யாவின் சுகோவ்ஸ்கையில் நடைபெறும் மேக்ஸ் சர்வதேச விமானக் கண்காட்சியில், முதன்முறையாக, இந்திய விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் சாகசக் குழு பங்கேற்கவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கண்காட்சியின் இந்த வருடப் பதிப்பு, ஜூலை 20 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘துருவ்’ மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்களுடன், நான்கு ஹெலிகாப்டர் சாகச நிகழ்வுகளை சாரங் குழு, ரஷ்யாவில் முதன்முறையாக நிகழ்த்தும். ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் நவீன இயந்திரங்களுடன் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள், ராணுவப் பணிகளுக்கு ஏற்றவையாகும். இந்திய விமானப் படையுடன் இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோரக் காவல்படையும் இந்த ஹெலிகாப்டரைப் பயன்படுத்தும்.
கடந்த 2003-ஆம் ஆண்டு பெங்களூருவில் உருவாக்கப்பட்ட சாரங் குழு, சர்வதேச அளவில் முதன்முறையாக 2004-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய விமானக் கண்காட்சியில் கலந்து கொண்டது.
அதுமுதல் இந்நாள்வரை இந்தியா சார்பாக ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, இங்கிலாந்து, பஹ்ரைன், மொரிஷியஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் நடைபெறும் விமானக் கண்காட்சிகள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் சாரங் பங்கேற்று வருகிறது. இது தவிர, உத்தரகாண்டில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆபரேஷன் ரகத், 2017-ஆம் ஆண்டு தாக்கிய ஒக்கி புயல் மற்றும் 2018-ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள நிவாரணப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளிலும் இந்தக் குழு முனைப்புடன் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...