அணில்களுக்காக இரு வாரங்கள் இருசக்கர வாகனத்தை எடுக்காமல் இருந்த அரசு கால்நடை மருத்துவர்.!
மதுரை ஆனையூர் சேர்ந்த அரசு கால்நடை மருத்துவர் மெரில்ராஜ். இவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் வீட்டு முன் நிறுத்தி உள்ளார்.
இவரது ,இரு சக்கர வாகனத்தில் அருகே ஒரு அணில் அங்குமிங்கும் சென்று இரு சக்கர வாகனத்தில் உள்ளக் இருக்கைக்கு அடியில் சென்று வந்துள்ளது.இதைக் கவனித்த கால்நடை மருத்துவர், இருசக்கர வாகனத்தில், அணில் ஒன்று கூடு கட்டியிருந்தது.
இதை ப்பார்த்த, மெரில் ராஜ் கூட்டை கலைக்காமல், ஒரு மாதத்திற்கு விலை உயர்ந்த இருசக்கர வானத்தையும் எடுக்காமல், அங்கேயே நிறுத்தி வைத்திருந்தார், அணில் 3 குட்டி ஈன்றது. அதற்கு , சிகிச்சையும் அளித்து வந்தார். அவர் கூறுகையில்: அணில் கூடி கட்டுவதற்காக நான் கூட கலக்கவில்லை அணில் கூடு கட்டி, குட்டியிடும் வரை அழகாக இரு சக்கர வாகனத்தை மட்டும் தான் விட்டுக் கொடுத்து உள்ளேன்.
அதுவும், ஒரு உயிர் தான் நம்பிக்கையில் கூடு கட்டியது. அந்தக் அந்த நம்பிக்கையை, மனிதர்களாகிய நாம் வீணாக்க வேண்டாம். அதனால்தான், அந்தக் கூட்டை கலைக்காமல், அதற்கு வித்திடும் வரை இந்த வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றேன் என்று தெரிவித்தார். பின் ஒரு மாதத்திற்கு பிறகு, அணில் குட்டிகளை தூக்கிச் சென்று அதன் இருப்பிடத்திற்கு சென்று விட்டது.
செய்தி : ரவிசந்திரன்
Leave your comments here...