கால்நடை மற்றும் பால் பொருட்கள் திட்டத்தில் மாற்றங்கள் : ரூ.54,618 கோடி கால்நடை சிறப்பு நிதித் தொகுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா

கால்நடை மற்றும் பால் பொருட்கள் திட்டத்தில் மாற்றங்கள் : ரூ.54,618 கோடி கால்நடை சிறப்பு நிதித் தொகுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கால்நடை மற்றும் பால் பொருட்கள் திட்டத்தில் மாற்றங்கள் : ரூ.54,618 கோடி  கால்நடை சிறப்பு நிதித் தொகுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கால்நடை துறை மற்றும் பால் பொருட்கள் திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கும், ரூ.54,618 கால்நடை சிறப்பு நிதித் தொகுப்புக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கால்நடை துறைக்கு சிறப்பு நிதித் தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், 2021-22 தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மறுசீரமைக்கப்பட்டு, மாற்றியமைக்கப்பட்டு கால்நடை வளர்ப்புக்கு ஊக்கமளித்து கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள 10 கோடி விவசாயிகளுக்கு நியாயமான வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்படும். இந்த பொருளாதார தொகுப்பின் மூலம் மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.9,800 கோடி நிதி வழங்கி, ரூ.54,618 கோடி முதலீடு பெற திட்டமிட்டுள்ளது.

நிதி செலவு மத்திய அரசு சார்பில், 2021-22 தொடங்கி அடுத்த 5 ஆண்டு காலத்துக்கு ரூ.9,800 கோடி நிதி உதவி வழங்குவதால் ரூ.54,618 கோடி முதலீடு கால்நடை துறையில் குவியும். இது மாநில அரசுகள் மற்றும் மாநில கூட்டுறவு சங்கங்கள், நிதி நிறுவனங்கள், வெளி நிதி முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளின் முதலீடுகளும் அடங்கும்.

இத்திட்டத்தின்படி, கால்நடை துறையின் திட்டங்கள் அனைத்தும் 3 பெரும் பிரிவுகளாக இணைக்கப்படும். இவை, ராஷ்டிரீய கோகுல் மிஷன், தேசிய பால்பொருட்கள் வளர்ச்சி திட்டம் (NPDD), தேசிய கால்நடை வளர்ப்பு மிஷன் (NLM), கால்நடை வளர்ப்பு கணக்கெடுப்பு மற்றும் ஒருங்கிணைந்த மாதிரி கணக்கெடுப்பு (LC & ISS) ஆகியவற்றை துணைத் திட்டங்களாகவும், நோய் தடுப்பு திட்டம் கால்நடை உடல்நலன் மற்றும் நோய் தடுப்பு என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

தற்போது பால் பொருள் விற்பனை கூட்டுறவுகள் மற்றும் வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு உதவ கால்நடை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (AHIDF) மற்றும் பால்பொருட்கள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (DIDF) ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு 3 ஆவது திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

ராஷ்டிரீய கோகுல் மிஷன் மூலம் உள்நாட்டு கால்நடை இனங்கள் பாதுகாக்கப்படுவதோடு, கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களின் பொருளாதார சூழல் மேம்பட உதவும். தேசிய பால்பொருட்கள் மேம்பாட்டுத் திட்டம் (NPDD) மூலம் நாடு முழுவதும் 8900 மிகப் பெரிய பால் குளிர்பதன நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது 8 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு உதவுவதோடு, நாள்தோறும் கூடுதலாக 20 லட்சம் லிட்டர்கள் கொள்முதல் செய்யப்படும். இத்திட்டத்துக்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் நிதி உதவி பெறப்பட்டு கால்நடை துறை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, 4,500 கிராமங்களில் புதிதாக உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

Leave your comments here...