மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்..!
- July 15, 2021
- jananesan
- : 537
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியையும், ஓய்வூதியர்களுக்கு அகவிலை நிவாரணத்தையும் உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, 2021 ஜூலை 1 முதல் அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் 17 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 28 சதவீதமாக, அதாவது 11 சதவீதம், உயர்த்தி வழங்கப்படும்.
கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட வரலாறு காணாத சூழ்நிலையின் காரணமாக, 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 ஆகிய தேதிகளில் இருந்து நிலுவையில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும், ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது, 2021 ஜூலை 1 முதல் அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் 17 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 28 சதவீதமாக, அதாவது 11 சதவீதம், உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 மூலம் உருவாகியுள்ள கூடுதல் தவணைகளை இந்த உயர்வு பிரதிபலிக்கிறது. 2021 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரையிலான காலகட்டத்திற்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 17 சதவீதமாக இருக்கும்.
Leave your comments here...