மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருக்கு சொந்தமான ரூ.65 கோடி சொத்துக்கள் முடக்கம்..!

இந்தியா

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருக்கு சொந்தமான ரூ.65 கோடி சொத்துக்கள் முடக்கம்..!

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருக்கு சொந்தமான ரூ.65 கோடி சொத்துக்கள் முடக்கம்..!

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் சம்பந்தப்பட்ட சர்க்கரை ஆலை ஒன்றை அமலாக்கத்துறை அலுவலர்கள் முடக்கினர். இதன் மதிப்பு ரூ.65 கோடியே 75 லட்சம் ஆகும்.

மஹாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில், 2007 முதல் 2012-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், கடன் வழங்கியது உள்ளிட்ட விஷயங்களில், ரூ.1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக கடந்த 2019-ம் ஆண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் இந்த வழக்கை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி நடந்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்க துறை வழக்கு பதிவு செய்தது. இந்த ஊழலில் உரிய ஆவணங்கள் இன்றி கடன் வழங்கியது, குறைந்த விலைக்கு சர்க்கரை ஆலை சொத்துகளை விற்றது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப் பட்டன.

அஜித் பவார் சம்பந்தப்பட்ட இந்த ஆலை மீது பண மோசடி புகார் எழுந்தது. இதையடுத்து இங்கு அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள்.

அதன் பின்னர் இந்த ஆலை முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் வெளியான அறிக்கையில், “இந்த சொத்துக்கள் குரு கமாடிட்டி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் உள்ளன. ஜரண்டேஷ்வர் சுகர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

இது மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் மற்றும் சுனேத்ரா அஜித் பவார் ஆகியோருடன் தொடர்புடைய நிறுவனம் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் மேலே குறிப்பிட்ட நிறுவனங்களின் பெயரில் வங்கிகளில் கடன்களும் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...