ஜம்மு விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
சமீபத்தில் ஜம்மு விமான நிலையத்தில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் சார்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக மதுரை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டர் உமா மகேஸ்வரன் மற்றும் உதவி கமாண்டர் சனிஷ் ஆகியோரது தலைமையில் விமான நிலைய நிர்வாகத்தினரிடம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, இன்று முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் சார்பாக 3 அடுக்கு பாதுகாப்பு மற்றும் காவல்துறையினரின் சார்பாக இரண்டு அடுக்கு பாதுகாப்பு என, மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பயணிகளுடன் வருகை தரும் பார்வையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என, மதுரை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்தி: Ravi Chandran
Leave your comments here...