இடிந்து விழும் நிலையில் அரசு ஆதிதிராவிட ஆரம்பப் பள்ளி கட்டிடம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி சுமார் முப்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளி கடந்த 5 ஆண்டுகளாக மிகவும் பாழடைந்து போய் இடியும் நிலையில் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கட்டடம் முழுவதும் சிதிலமடைந்து உள்ளதால் இந்த பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் மிகவும் தயங்கி வருகின்றனர். மேலும் இந்தப் பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தரவேண்டும் என்றும் அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும், இது அருகில் உள்ள சமுதாயக்கூடம் மிகவும் பாழடைந்து போய் உள்ளதால் அதனையும் கட்டித்தர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, முனியம்மாள் 47 என்பவர் கூறும் பொழுது, நாச்சிகுளம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஆரம்பப்பள்ளி 20 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது. இந்தப் பள்ளியின் முன்னாடி உள்ள முகப்புகள் இடிந்த நிலையில் உள்ளது. எப்போது இந்தக் கட்டிடம் இடிந்து விழும் என்ற பயத்தில் இருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தை அப்புறப்படுத்தி, புதிய பள்ளிக் கூட கட்டிடத்தை கட்டி தர வேண்டும், என்று கேட்டுக்கொண்டுள்ளார்.அரசு பள்ளிக்கூடங்களை திறக்கக் கூடிய நிலையில் தயாராக இருப்பதால், இங்குள்ள பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். சுமார் நான்கு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்துள்ளது. கட்டிடத்தை தாங்கியுள்ள தூண்களின் அடித்தளம் மிகவும் சேதமடைந்து கட்டிடத்தில் மேல் தளத்தில் உள்ள சிமெண்ட் கம்பிகள் பெயர்ந்தும் தெரிகிறது.
இந்தக் கட்டிடம் எப்ப வேண்டுமானாலும், இடிந்து விழலாம் என்று கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து இந்த பள்ளிக்கு புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் மேலும், இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துகள் ஏற்படும் முன் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதேபோல், 1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட சமுதாயக்கூடம் கட்டிடமும் மிகவும் சேதம் அடைந்து மேற்கூரை உடைந்தும், கிராம பொதுமக்கள் பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. இதுகுறித்து
ராமையா 75 என்பவர் கூறும்போது, இந்த சமுதாயக் கூடம் 1972 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சமீபத்தில் தரைப்பகுதி உயர்ந்ததால், இந்த சமுதாய கூடம் மிகவும் பள்ளத்தில் இறங்கிவிட்டது. கிராம மக்கள் தற்போது, இதை பயன்படுத்துவதில்லை ரோட்டில் வெளியே பந்தல் மற்றும் மேடை அமைத்து திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம் அரசு உரிய நடவடிக்கை எடுத்து நாச்சிகுளம் கிராமம் காலனி பகுதியில் உள்ள மக்களுக்கு புதியதாக சமுதாயக் கட்டிடம் கட்டித்தர வேண்டும் இடிந்த நிலையில் உள்ள கிராம சாவடி புதிதாக கட்டித்தர வேண்டும் என்று கூறினார்.
இந்த இரண்டு கட்டடங்களும் இடிந்து பொதுமக்களுக்கு விபத்துகளை ஏற்படுத்தும் முன், அரசு சுதாரித்து புதிய கட்டிடங்களைக் கட்டி தரவேண்டும் என்று இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Leave your comments here...