டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு..10 லட்சம் ரூபாய் சன்மானம் – புகைப்படம் வெளியிட்டது என்ஐஏ.!
டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் சந்தேகிக்கப்படும் இருவர் தொடர்பான வீடியோவை தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே கடந்த ஜனவரி 29-ந் தேதி ஒரு குண்டு வெடித்தது. இதனால் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் நொறுங்கின. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
.@NIA_India is seeking information to help identify 2 suspected individuals ( as seen in CCTV Footage) in connection with NIA Case ( Explosion near Israeli Embassy, New Delhi). Any information leading to identification of the suspected individuals will be rewarded @sudhakardas pic.twitter.com/UfPZKGB7rn
— DD News (@DDNewslive) June 15, 2021
இந்த நிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்களின் புகைப்படங்களையும், வீடியோவையும் தேசிய புலனாய்வு முகமை நேற்று வெளியிட்டது.
#NIA_India is seeking information to help identify two suspected individuals seen in CCTV footage in connection with NIA Case RC-02/2021/NIA/DLI related to explosion near Israeli Embassy, New Delhi.
— NIA India (@NIA_India) June 15, 2021
சந்தேகிக்கப்படும் இரு நபர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், அவர்களைப் பற்றிய தகவல்களை do.nia@gov.in, info.nia@gov.in ஆகிய மின்னஞ்சல்கள் மூலமாகவும், 011-24368800, 9654447345 என்ற தொலைபேசி எண்கள் வழியாகவும் தெரிவிக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த இருவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...