கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரசாரங்கள் – நாடு தழுவிய தன்னார்வலர் சேவைகளை தொடங்க பாஜக திட்டம்!

அரசியல்இந்தியா

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரசாரங்கள் – நாடு தழுவிய தன்னார்வலர் சேவைகளை தொடங்க பாஜக திட்டம்!

கொரோனா தடுப்பூசி  விழிப்புணர்வு பிரசாரங்கள் – நாடு தழுவிய தன்னார்வலர் சேவைகளை தொடங்க பாஜக திட்டம்!

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரசாரங்கள், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது உட்பட நாடு தழுவிய தன்னார்வ சேவைகளை பாஜக தொடங்கி இருக்கின்றது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக இருந்த நேரத்தில், மத்திய பாஜக அரசு தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் கோட்டைவிட்டதாக, எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டின.இதையடுத்து, தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள், நிவாரணங்கள், மருத்துவ தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட சமூக பணிகளில், பாஜக தொண்டர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

தடுப்பூசி பிரசாரத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், 18 – 44 வயது வரையிலான, தொற்று எளிதில் பாதிக்கப்பட கூடிய பணி செய்பவர்கள், உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். வீடு வீடாகச் சென்று பொருட்களை வினியோகிப்பவர்கள், ஆட்டோ டிரைவர்கள், வீட்டு பணி செய்பவர்கள், செய்தி தாள் மற்றும் சமையல் எரிவாயு வினியோகிப்பவர்கள் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள,பாஜக தொண்டர்கள் அறிவுறுத்தும்படி, கட்சி தலைமை வலியுறுத்தி உள்ளது.

கொரோனா மூன்றாவது அலை, குழந்தைகளை பெரிதும் பாதிக்கும் என கூறப்படுவதால், 12 வயதுக்கு குறைவான சிறார்களின் பெற்றோர், அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது குறித்து, கிராமப்புறங்களில் உள்ள மருத்துவ தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க, மாநில அளவில் குழுக்களை பாஜக நியமித்துள்ளது. இரண்டாம் அலையின் போது, மத்திய அரசு குறித்து எழுந்த விமர்சனங்களை சரி செய்ய, மக்கள் நலப் பணிகளில் கட்சி தொண்டர்களை ஈடுபடும்படி, பாஜக அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave your comments here...