இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு 42 லட்சம் பேர் பலி..? அமெரிக்க நாளிதழுக்கு மத்திய அரசு கண்டனம்.!
அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்சில், ‘இந்தியாவில் கொரோனாவுக்கு மூன்று லட்சம் பேர் பலியாகியுள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது. உண்மையில், 42 லட்சம் பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பலி எண்ணிக்கையை, இந்திய அரசு மூடி மறைக்கிறது’ என, செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதற்கு மறுப்பு தெரிவித்தும், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதல்களின் படி, கொரோனாவால் இறந்தவர்களை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதிவு செய்து வருவதாகவும், மாவட்ட வாரியாக பலி எண்ணிக்கை தினமும் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில், கொரோனாவுக்கு 42 லட்சம் பேர் இறந்துவிட்டதாக எந்த ஆதாரமும் இன்றி, கற்பனையின் அடிப்படையில் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது என்றும், அதற்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Leave your comments here...