“கொரோனா மாதா” எனும் பெயரில் புதிய கோயில் – சிலை அமைத்தவர் கைது.!

இந்தியா

“கொரோனா மாதா” எனும் பெயரில் புதிய கோயில் – சிலை அமைத்தவர் கைது.!

“கொரோனா மாதா” எனும் பெயரில் புதிய கோயில் – சிலை அமைத்தவர் கைது.!

இந்தியாவில் கொரோனா கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், அதன் தாக்கம் தற்போது குறைந்துவருகிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க ஒரே வழியாக உள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடம் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அண்மையில் கோயம்புத்தூரில் கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க வேண்டி,கொரோனா தேவிக்கு சிலை எழுப்பப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. கேரளாவிலும் ஒருவர் கொரோனா தேவிக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்திவருகிறார்.

இந்தநிலையில் உத்தரப்பிரதேச மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்தின் சுக்லாப்பூர் கிராம மக்கள், ஒரு வேப்ப மரத்தின் கீழ் கரோனா மாதாவிற்கு கோவில் கட்டியுள்ளனர். உள்ளூர் மக்களிடம் பணம் வசூலித்து இந்தக் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இதில் உள்ள கொரோனா மாதா சிலையும் முகக்கவசம் அணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


கொரோனா மாதாவிற்கு கோவில் கட்டப்பட்டது குறித்து உள்ளூர்வாசிகள் கூறுகையில், “கொரோனா வைரஸ் தொற்றுநோயையும், ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த அதன் கொடிய தாக்கத்தையும் கண்டபின், தெய்வத்தை வணங்குவது நிச்சயமாக மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்ற முழு நம்பிக்கையுடன், வேப்ப மரத்தின் கீழ் கொரோனா மாதாவிற்கு கோவில் எழுப்ப முடிவு செய்தோம்” என கூறியுள்ளனர்.

இதை கேள்விப்பட்ட மாவட்ட நிர்வாகம் கோயிலை அகற்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.இதையடுத்து, நேற்று இரவு கிராமத்திற்கு வந்த போலீஸார் அக்கோயிலை இடித்து சிலையை கைப்பற்றியது. சிலையுடன் கோயிலை அமைத்ததாக ஜுஹி ஷுகுல்பூர்வாசி ஒருவரையும் கைது செய்து வழக்குகள் பதிவு செய்துள்ளது. இவர் சட்டவிரோதமாகக் கோயிலை கட்டியதுடன், பொதுமக்கள் இடையே மூடநம்பிக்கைகளை வளர்த்ததாகவும் வழக்குகள் பதிவாகி உள்ளன.

Leave your comments here...