பாஜகவில் இருந்து மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முகுல் ராய்.!
திரிணமுல் காங்கிரஸ் உருவானதில் இருந்து அதில் இருந்த மூத்த தலைவர் முகுல் ராய், கடந்த 2017ல், பாஜகவில் இணைந்தார். பின்னர், அவர் பாஜக கட்சியின் தேசிய துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பலரும் திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகி, பாஜகவில் ஐக்கியமானார்கள். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்., அமோக வெற்றிப்பெற்றதை மம்தா 3வது முறையாக முதல்வரானார். இந்த தேர்தலில் முகுல் ராய், பாஜக சார்பில் உத்தர கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
இதற்கிடையே, மம்தா கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பலரும் மீண்டும் அக்கட்சிக்கு திரும்ப உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதில், முகுல் ராய் திரிணமுல் காங்கிரஸ்க்கு திரும்புவதாக வெளியான தகவல் முக்கியமாக பார்க்கப்பட்டது.
BJP national vice president Mukul Roy and his son Subhranshu Roy join TMC in the presence of West Bengal CM Mamata Banerjee, in Kolkata. pic.twitter.com/WS9oFE2J79
— ANI (@ANI) June 11, 2021
இந்நிலையில் கோல்கட்டாவில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு முகுல் ராய் வருகை தந்தார். அங்கு மம்தாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர், மம்தா முன்னிலையில், திரிணமுல் காங்கிரசில் இணைத்து கொண்டார்.திரிணமுல் காங்., கட்சியில் இருந்து விலகி பாஜக தேசிய துணை தலைவராக பொறுப்பேற்றவர், மீண்டும் திரிணமுல் கட்சிக்கே சேரயிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் பின்னர் நிருபர்களை சந்தித்த முதல்வர் மம்தா கூறியதாவது: முகுல்ராய் மீண்டும் தாய்கழகத்திற்கே வந்துள்ளார். கட்சியில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என தெரிவித்தார்.
முகுல்ராய் கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையில் யாரும் பாஜகவில் நீடிக்க முடியாது. அங்கு சென்ற அனைவரும் மீண்டும் கட்சிக்கு திரும்பிவிடுவார்கள் என தெரிவித்தார்.
Leave your comments here...