காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்தார் – உபியில் காங்கிரஸ் பெரும் பின்னடைவு.!
மறைந்த காங்கிரஸ் துணைத் தலைவரும், ராஜிவின், அரசியல் ஆலோசகராக விளங்கியவருமான, மறைந்த, ஜிதேந்திர பிரசாத்தின் மகன் ஜிதின் பிரசாதா (47). உ.பி.,யை சேர்ந்த இவர், காங்கிரசின் இளம் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். ஒரு காலத்தில் அக்கட்சி முன்னாள் தலைவர் ராகுலுக்கு நெருங்கியவராகவும் இருந்தார். செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளராகவும் இருந்தார்.
கட்சிக்கு முழு நேர தலைவர் தேவை என சோனியாவுக்கு கடிதம் எழுதிய தலைவர்களில். இவரும் ஒருவர். இதனையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி.,யின் லக்மிபுரி கெரி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி இருந்தார்.
கடந்த 2019ம் ஆண்டு ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியானது. ஆனால், அதனை அவர் திட்டவட்டமாக மறுத்தார். தொடர்ந்து, சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
Delhi: Congress leader Jitin Prasada joins BJP in the presence of Union Miniter Piyush Goyal, at the party headquarters. pic.twitter.com/lk07VGygbe
— ANI (@ANI) June 9, 2021
இந்நிலையில், ஜிதின் பிரசாதா இன்று மதியம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசினார்.தொடர்ந்து, பாஜக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பியூஷ் கோயல் முன்னிலையில், ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்தார். அவருக்கு பியுஷ் கோயல், சால்வை அணிவித்து கவுரவித்ததுடன், உறுப்பினர் அட்டையையுடன், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார்.
Delhi: Jitin Prasada meets BJP national president JP Nadda, after joining the party. The Congress leader joined BJP today in the presence of Union Minister Piyush Goyal. pic.twitter.com/0QsU6QNuoY
— ANI (@ANI) June 9, 2021
பாஜகவில் இணைந்த பிறகு ஜிதின் பிரசாதா கூறியதாவது: காங்கிரசுடன் எனக்கு மூன்று தலைமுறை தொடர்பு உள்ளது. பல்வேறு ஆலோசனைக்கு பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளேன். காங்கிரசில் பணியாற்றும் போது, மக்களுக்காக உழைக்க முடியவில்லை. ஒரே குடும்பத்தினரால் இயக்கப்படும் கட்சியாக பா.ஜ., இல்லை. அமைப்பு ரீதியாக செயல்படும் ஒரே கட்சியாக பா.ஜ., உள்ளது. புதிய இந்தியாவை பிரதமர் மோடி கட்டமைத்து வருகிறார். நாட்டிற்காக ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார். தேசிய கட்சியாக பா.ஜ., மட்டுமே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...