சமூக நலன்
கட்டுமான திட்டங்களுக்கு கடன் அளிக்க சிறப்பு நிதி உருவாக்க முடிவு – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!
மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு கடன் அளிக்க சிறப்பு நிதி உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தோராயமாக மதிப்பிட்டதில் 1,600 குடியிருப்பு திட்டங்கள் முடங்கியுள்ளன.
மத்திய அரசு சார்பில் ரூ.10 ஆயிரம் கோடியும், எஸ்பிஐ மற்றும் எல்ஐசி சார்பில் ரூ.15 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்படும். ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்..
Leave your comments here...