ஐஎன்எஸ் சந்தயக் போர்க்கப்பல் கடற்படையில் இருந்து நாளை விடுவிப்பு.!

இந்தியா

ஐஎன்எஸ் சந்தயக் போர்க்கப்பல் கடற்படையில் இருந்து நாளை விடுவிப்பு.!

ஐஎன்எஸ் சந்தயக் போர்க்கப்பல் கடற்படையில் இருந்து நாளை விடுவிப்பு.!

கடற்படையில் 40 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இருந்த ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல் நாளை விடுவிக்கப்படுகிறது. இந்திய கடற்படை பயன்பாட்டுக்காக ஐஎன்எஸ் சந்தயக் என்ற போர்க்கப்பல் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு கடந்த 1981ம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டது.இது கடலில் கப்பல் செல்லும் வழித்தடங்களில் அளவீடு பணிகளை மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலாகும்.

இந்தக் கப்பல் தனது பணிக்காலத்தில், 200 முக்கிய ஹைட்ரோ கிராபிக் அளவீடுகளையும், நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோர பகுதிகள், அந்தமான் கடல் பகுதி மற்றும் அண்டை நாடுகளில் ஏராளமான அளவீடு பணிகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அளவீடு பணிகளை தவிர, கடந்த 1987ம் ஆண்டு இலங்கையில் இந்திய அமைதிப்படைக்கு உதவும் வகையில் ஆப்பரேஷன் பவன் நடவடிக்கையிலும், 2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது, மனிதாபிமான உதவி நடவடிக்கை மற்றும் இந்தியா -அமெரிக்கா இடையேயான கூட்டு போர் பயிற்சி ஆகியவற்றிலும் பங்கேற்றுள்ளது.

இந்திய கடற்படையில் கடந்த 40 ஆண்டுகளாக, பயன்பாட்டில் இருந்த இந்த கப்பல் நாளை விடுவிக்கப்படுகிறது. இதற்கான விழா, கொவிட் நெறிமுறைகள் காரணமாக விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் எளிய முறையில் நாளை நடைப்பெறுகிறது.

இந்த விழா வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங் முன்னிலையில் நடைப்பெறுகிறது.நாளை மாலை சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் இந்த போர்க்கப்பலில் உள்ள கடற்படை கொடி இறக்கப்பட்டு, கடற்படை பணியிலிருந்து விடுவிக்கப்படும்.

Leave your comments here...