“TET “ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதி சான்றிதழ் 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் வரை நீட்டிப்பு – மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழின் செல்லுபடித் தன்மையை 7 ஆண்டுகளிலிருந்து ஆயுள்காலம் முழுவதும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
2011-ஆம் ஆண்டு முதல் இது அமலுக்கு வரும். 7 ஆண்டுகாலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ள விண்ணப்பதாரர்களின் சான்றிதழை மறு மதிப்பீடு செய்வது/ புதிய சான்றிதழ்களை வழங்குவது போன்ற தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
கற்பிக்கும் துறையில் ஈடுபட ஆர்வமாக உள்ள விண்ணப்பதாரர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நேர்மறை முயற்சியாக இது அமையும் என்று திரு பொக்ரியால் தெரிவித்தார்.
Validity period of Teachers Eligibility Test (TET) qualifying certificate has been extended from 7 years to lifetime with retrospective effect from 2011. https://t.co/8IQD3cwRTz (1/2) pic.twitter.com/EGi5IJ2wNu
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) June 3, 2021
பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிவதற்குத் தேவையான அத்தியாவசிய தகுதிகளுள் ஆசிரியர் தகுதித்தேர்வும் ஒன்று. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மாநில அரசுகளால் நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் நாள் முதல் 7 ஆண்டுகளுக்கு இதற்கான சான்றிதழ் செல்லுபடியாகும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...