இந்தியா
தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராக நீதிபதி அருண் மிஸ்ரா பொறுப்பேற்றுக்கொண்டார்
தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராக இருந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதன்பிறகு அப்பதவி காலியாக இருந்தது.
இந்தநிலையில், தேசிய மனித உரிமை கமிஷன் புதிய தலைவராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.இவர் 2014-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆனார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.
முன்னதாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உயர்மட்ட குழுவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
Leave your comments here...