அரசு மருத்துவமணைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கிய தன்னார்வலர்கள்.!
இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சமூக ஆர்வலர்கள் மூலம் 3 ஆக்சிசன் செறிவூட்டி வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்காக அரசு சார்பில் ஆக்சிசன் சிலிண்டர்கள் தயார் நிலை இருந்தாலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆக்சிசன் செறிவூட்டி கருவிகளை வழங்கி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக ஸ்ரீராம் ஆட்டோ பைனான்ஸ் சார்பில் 70 ஆயிரம் மதிப்பிலான மூன்று ஆக்சிசன் செறிவூட்டி கருவிகளை இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இராஜபாளையம் மருத்துவமனை அதிகாரி மருத்துவர் பாபுஜி இடம் இந்த மூன்று கருவிகளையும் ஆக்ஜிஷன் வழங்கினர் இது வரை இந்த மருத்துவமனைக்கு 13 ஆக்சிசன் செறிவூட்டி வழங்கப்பட்டுள்ளதாகவும் தன்னார்வலர் செய்யும் இதுபோன்ற உதவியால் ஆக்ஸி எந்த ஒரு நோயாளியும் இதுவரை பாதிக்கப்படவில்லை அவர்கள் தேவையான ஆக்ஸிஜனும் முரையாக வழங்கப்பட்டு வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
செய்தி: Ravi Chandran
Leave your comments here...