கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – பிரதமர் நரேந்திர மோடி
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்
கொரோனா பெருந்தொற்றின் கோர தாண்டவத்தால், பெற்றோரை இழந்த நிறைய குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக் குறியாகி இருக்கிறது. இந்தநிலையில் அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உதவ முன் வரவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். அந்த வகையில் பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 23 வயதை அடைந்ததும் ரூ.10லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். குழந்தைகள் 18 வயதை அடைந்தவுடன் மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
* தனியார் பள்ளியில் படித்தால் பிஎம் கேர் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும் என்றும், புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎம் கேர்ஸ் நிதி மூலம் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை ஆயுஷ்மான் பாரத திட்டத்தின் கீழ் ரூ .5 லட்சம் இலவச சுகாதார காப்பீடு கிடைக்கும் என்றும் அதற்கான நிதி பிஎம் கேர்ஸ் நிதி மூலம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...