கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க கூடாது: மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணியினர் மனு
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே மனுக்கள் வாங்கினார்.அப்போது கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க கூடாது. அதுதொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கொடுத்தனர்
அந்த மனுவில் : – குமரி மாவட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட பழமையான கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் நிலங்கள் கோவில் பராமரிப்பு, பூஜை மற்றும் கோவில் காரியங்களுக்காக நமது முன்னோர்களால் அந்தந்த கோவில் சுவாமிகளின் பெயரில் கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் கோவிலுக்கு சொந்தமானவை. அரசுக்கு சொந்தமானது அல்ல. சமீபத்தில் தமிழக அரசு கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா கொடுக்கவும், தனியாருக்கு விற்கவும் அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது கோர்ட்டில் நடைபெற்று வரும் ஒரு வழக்கு தொடர்பாக தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூல பத்திரத்திலும் மேற்கண்டவாறே கூறியுள்ளது.கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு இலவசமாக பட்டா வழங்கவும், அந்த நிலங்களை அவர்களே விற்பதற்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது பக்தர்களை மிகுந்த வேதனை அடைய செய்துள்ளது. எனவே இந்த அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும். கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூல பத்திரத்தையும் திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...