தமிழகம் முழுதும், இன்று முதல், தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்.!
தமிழகம் முழுதும், இன்று முதல், தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க, இம்மாதம் 10ம் தேதி முதல், இன்று(மே 24) காலை, 4:00 மணி வரை, சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தளர்வுகளை பயன்படுத்தி, சிலர் வெளியில் சுற்றினர். அதை தடுக்க, 15ம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன; அதுவும் பலன் அளிக்கவில்லை. எனவே, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு, இன்று முதல், 31 காலை, 6:00 மணி வரை அமலாகிறது.
இன்று முதல், ஒரு வாரத்திற்கு கடைகள் எதுவும் திறக்கப்படாது; மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்கும். உணவகங்களில் குறிப்பிட்ட நேரம் மட்டும், ‘பார்சல்’ சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களை பொறுத்தவரை, தலைமை செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும்; மற்ற அலுவலகங்கள் செயல்படாது.தனியார் நிறுவன ஊழியர்கள், வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் எதுவும் இயங்காது. எனவே, பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து, முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது
Leave your comments here...