சமுத்திர சேது திட்டத்தின் கீழ் கொரோனா நிவாரணப் பொருட்களை கொண்டு வந்தன கடற்படை கப்பல்கள்.!

இந்தியா

சமுத்திர சேது திட்டத்தின் கீழ் கொரோனா நிவாரணப் பொருட்களை கொண்டு வந்தன கடற்படை கப்பல்கள்.!

சமுத்திர சேது திட்டத்தின் கீழ் கொரோனா நிவாரணப் பொருட்களை கொண்டு வந்தன கடற்படை கப்பல்கள்.!

சமுத்திர சேது-2 திட்டத்தின் கீழ் ஐஎன்எஸ் த்ரிகண்ட், ஜலஸ்வா ஆகிய இரு போர்க்கப்பல்கள் வெளிநாடுகளில் இருந்து கொவிட் நிவாரண மருத்துவ பொருட்களை இன்று இந்தியா கொண்டு வந்தன.

சமுத்திர சேது -2 திட்டத்தின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் இருந்து கொவிட் நிவாரணப் பொருட்களை இந்திய கடற்படையின் போர்க் கப்பல்கள் தாய்நாடு கொண்டு வருகின்றன.

ஐஎன்எஸ் த்ரிகண்ட் என்ற போர்க்கப்பல், கத்தாரிலிருந்து கொவிட் நிவாரணப் பொருட்களை இன்று மும்பை கொண்டு வந்தது. இந்த கப்பல் 2 திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கன்டெய்னர்களை தலா 20 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனுடனும், 100 ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் கொண்டு வந்தது.


ஐஎன்எஸ் ஜலஸ்வா என்ற போர்க்கப்பல், புரூனே மற்றும் சிங்கப்பூரில் இருந்து கொவிட் நிவாரணப் பொருட்களை இன்று விசாகப்பட்டினம் கொண்டு வந்தது. இவற்றில் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட, 18 கிரையோஜெனிக் டேங்குகள், 3,650 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 39 வென்டிலேட்டர்கள் கொண்டுவரப்பட்டன. இந்திய தூதரங்கள் மூலம் பெறப்பட்ட இந்த நிவாரணப் பொருட்கள் பல்வேறு மாநில அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், முக்கிய மருத்துவ பொருட்களை கொண்டு வரும் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டு வரும் அதே வேளையில், டவ்-தே புயல் பாதிப்பு காரணமாக படகு கவிழ்ந்த விபத்தில் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் இந்திய கடற்படையின் தேக், பெத்வா, சுபத்ரா, மகர், தரஷா ஆகிய கப்பல்கள், 7 கண்காணிப்பு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன.

Leave your comments here...