தென் மாவட்டங்களுக்கான இரண்டாவது ஆக்சிஜன் ரயில் ஒடிசாவில் இருந்து 79 டன் ஆக்சிஜன் கொண்டு வருகை.!

தமிழகம்

தென் மாவட்டங்களுக்கான இரண்டாவது ஆக்சிஜன் ரயில் ஒடிசாவில் இருந்து 79 டன் ஆக்சிஜன் கொண்டு வருகை.!

தென் மாவட்டங்களுக்கான இரண்டாவது ஆக்சிஜன் ரயில் ஒடிசாவில் இருந்து  79  டன் ஆக்சிஜன்  கொண்டு வருகை.!

தென் மாவட்டங்களுக்கான இரண்டாவது ஆக்சிஜன் ரயில் இன்று வந்தது. தென் மாவட்டங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கும் பொருட்டு இன்று 2 ஆவது ஆக்சிஜன் ரயில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை வந்தடைந்தது.

கொரோனா பெருந் தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது. மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்திய ரயில்வேயும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜனை உற்பத்தி நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் கொண்டு வந்து பற்றாக்குறையை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கான இரண்டாவது ஆக்சிஜன் ரயில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டிக்கு இன்று வந்து சேர்ந்ததுதமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான இரண்டாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் வழியாக (இன்று) வெள்ளிக்கிழமை அன்று வாடிப்பட்டி வந்தடைந்தது.

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து வாடிப்பட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 டேங்கர் லாரிகளில் 79.30 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. “ரோல் ஒன் – ரோல் ஆப்” (Roll On – Roll Off) திட்டத்தின் கீழ் இந்த ஆக்சிஜன் ரயில் இயக்கப்படுகிறது. இந்த டேங்கர் லாரிகள் சாலைகளில் ரோல் ஆன் ஆகவும் ரயிலில் ஏற்றப்பட்ட பிறகு ரோல் ஆப்பாகவும் இயக்கப்படுகிறது. ரயிலிலிருந்து இறக்கப்படும் டேங்கர் லாரிகள் தேவைப்பட்ட மருத்துவமனைகளுக்கு சாலை வழியாக அனுப்பி வைக்கப்படும்.தமிழகத்திற்கு மட்டும் இதுவரை 728.71 மெட்ரிக் டன் ஆக்சிசன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...