சர்வதேச அளவில் கவனம் பெற்ற காரணமா..? கேரளா சுகாதாரதுறை அமைச்சராக பணியாற்றி கே.கே ஷைலாஜா :புதிய அமைச்சரவையில் இடம் இல்லை.?

அரசியல்

சர்வதேச அளவில் கவனம் பெற்ற காரணமா..? கேரளா சுகாதாரதுறை அமைச்சராக பணியாற்றி கே.கே ஷைலாஜா :புதிய அமைச்சரவையில் இடம் இல்லை.?

சர்வதேச அளவில் கவனம் பெற்ற காரணமா..? கேரளா சுகாதாரதுறை அமைச்சராக பணியாற்றி கே.கே ஷைலாஜா :புதிய அமைச்சரவையில் இடம் இல்லை.?

கேரள மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 99 இடங்களில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்தது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் கூடிய இடதுசாரி ஜனநாயக முன்னணியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் வரும் 20ம் தேதி முதல்வராக பினராயி விஜயன் பதவி ஏற்பது என முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பெயர்கள் இறுதி செய்யப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட 12 பேரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 பேரும் அமைச்சர்களாக இடம் ஒதுக்கப்பட்டது. அமைச்சரவையின் அனைவரும் புதுமுகமாக இருந்தாலும், ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே.சைலஜாவுக்கு மட்டும் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என, அனைத்து தரப்பினரும் விரும்பினர். ஆனால் அமைச்சரவையில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

ஓகி புயல், மழை வெள்ள பிரளயம், நிப்பா வைரஸ், கொரோனா பெருந்தொற்று ஆகிய காலங்களில் சிறப்பாக செயல்பட்டதாக சர்வதேச அளவில் கவனம் பெற்றவர் . இவரது நடவடிக்கையில் தொற்று பெரும் அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது என்று அனைத்து மீடியாக்களும் பாராட்டின. மேலும் பினராயி விஜயன் அரசுக்கு உலக அரங்கில் நல்ல பெயரை ஈட்டித்தந்தார் கே.கே.சைலஜா.

கொரோனா 2வது அலை தாக்கி வரும் இச்சூழலில் அனுபவமிக்க சைலஜாவை கேரள அரசு, அமைச்சரவையில் இடம்தராமல் ஓரங்கட்டியுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. ‘புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்’ என்ற இடது சாரிகளின் வறட்டு சித்தாந்தத்தை இந்த பெருந்தொற்று சூழலிலும் பின்பற்றியுள்ளது கட்சிக்குழு . இது பல தரப்பினரின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது’

Leave your comments here...