தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் .!
- May 18, 2021
- jananesan
- : 992

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சத்யா செந்தில்குமார் ஏற்பாட்டில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று கபசுரக் குடிநீர் முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
மேலும் , கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்களப்பணியாளர்களாக செயல்பட்டுவரும் தூய்மை பணியாளர்களுக்கும் கபசுர குடிநீர், முககவசம், தடுப்பு உடைகள், கையுறை, உள்ளிட்ட நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் , துணைத் தலைவர் அழகுபிள்ளை, ஊராட்சி செயலர் ஆண்டிச்சாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆதனூர் ஊராட்சி சார்பில் தினந்தோறும் வீதிகள், கடைகள், கோவில்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளித்து பிளீச்சிங் பவுடர் போடப்பட்டு வருகின்றனர்.
Leave your comments here...