தமிழகத்தைத் சார்ந்த திமுக கூட்டணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே? அர்ஜுன் சம்பத் கேள்வி..?

அரசியல்

தமிழகத்தைத் சார்ந்த திமுக கூட்டணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே? அர்ஜுன் சம்பத் கேள்வி..?

தமிழகத்தைத் சார்ந்த திமுக கூட்டணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே?   அர்ஜுன் சம்பத் கேள்வி..?

தமிழகத்தைத் சார்ந்த திமுக கூட்டணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே எனவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களே மக்கள் பணியில் ஈடுபடுங்கள் கொரானா நிவாரணப் பணியில் ஈடுபடுங்கள் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், கூறியுள்ளார்.

இது குறித்து அவர வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தமிழகத்தைத் சார்ந்த திமுக கூட்டணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே? இவர்களால் தமிழகத்திற்கு என்ன பிரயோஜனம்! திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களே மக்கள் பணியில் ஈடுபடுங்கள் கொரானா நிவாரணப் பணியில் ஈடுபடுங்கள். பாரதிய ஜனதா கட்சியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதிகளிலும் தமிழகம் முழுவதும் கொரானா நிவாரணப் பணிகளிலும், இயற்கைப் பேரிடர் நிவாரணப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்தும், தனிப்பட்ட முறையிலும் சிறப்பாக சேவை செய்து வருகிறார்கள்

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமிகு வானதி சீனிவாசன் அவர்கள் தமிழகத்தில் நிவாரணப் பணிகளுக்காக ஆக்ஸிஜன் பற்றாக்குறை போக்கிட மத்திய மந்திரியை சந்தித்து பேசி 200 மெட்ரிக்டன்ஆக்ஸிஜன்தமிழகத்திற்கு கிடைத்திட வழிவகை செய்தார். தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு நோய் தீர்க்கும் ஆவி பிடிக்கும் எந்திரங்களை ஆங்காங்கு அமைத்து சேவை செய்து வருகிறார். மாவட்ட நிர்வாகம் தமிழக அரசாங்கத்தோடு இணைந்து வெகு சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமதி சி கே சரஸ்வதி அம்மா அவர்கள் மொடக்குறிச்சி தொகுதியிலும், ஈரோடு மாவட்டம் முழுவதும் நிவாரணப் பணிகளை வெகு சிறப்பாக செய்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மூலமும் பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமிகு நயினார் நாகேந்திரன் அவர்கள் தொகுதி முழுக்க நோய் பாதித்தவர்களுக்கு, முன்கள பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகிறார். கொரானா நோய் தடுப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சிறப்பாக செய்து வருகிறார்.

நாகர்கோயில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு எம் ஆர் காந்தி சட்டமன்ற தொகுதி மக்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று நிலை வந்தவுடன் இஸ்ரோ நிறுவன தலைவர் விஞ்ஞானி சிவன் அவர்களோடு பேசி இஸ்ரோ மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழகத்திற்கும் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்க வழிவகை செய்தார். தற்பொழுது மழை புயல் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தைச் சார்ந்த 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள், எங்கே போனார்கள்? மக்கள் மத்தியிலே அவர்களை காணவில்லை!

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் அவர்கள் போலீசில் புகார் கொடுத்து விளம்பரம் தேடிக் கொள்ளும் வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அதேபோல காங்கிரஸ் கட்சி ஜோதிமணி அவர்களும் மத்திய அரசுக்கு எதிராக பேசி விளம்பரம் தேடிக் கொள்ளும் முயற்சியில் மட்டுமே இருக்கிறார்கள்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழகத்திற்கு என்ன பிரயோஜனம்? மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கம்யூனிஸ்ட் கட்சி வெங்கடேசன் எப்பொழுது பார்த்தாலும் மத்திய அரசை குறை கூறுவதும் ஜக்கி வாசுதேவ் அவர்களை குறை கூறுவதும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தைச் சார்ந்த திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிவாரணப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிரான பிரச்சாரங்களை செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக மக்கள் பணியை செய்ய வேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து மக்கள் பணி செய்ய அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...