இந்தியாவில் 6000 ரயில் நிலையங்களில் வைஃபை வசதிகள்.!
இந்திய ரயில்வே, 6000 ரயில் நிலையங்களில் வைஃபை வசதிகளை நிறுவியுள்ளது.
பயணிகள் மற்றும் பொதுமக்களை டிஜிட்டல் முறையுடன் இணைப்பதற்காக வைஃபை வசதிகளை தொலைதூர ரயில் நிலையங்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் இந்திய ரயில்வே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
நாட்டிலேயே முதன்முறையாக கடந்த 2016-ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்ட வைஃபை சேவை, மே 15, 2021 அன்று ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தின் ஹசாரிபாக் நகர் ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டதன் வாயிலாக இந்தியாவில் 6000 ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அதே நாளில் ஒடிசா மாநிலத்தின் அங்குல் மாவட்டத்தில் உள்ள ஜராபதா ரயில் நிலையத்திலும் வைஃபை சேவை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 418 ரயில் நிலையங்களில் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கங்களை செயல்படுத்தும் வகையில் ரயில் நிலையங்களில் வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஊரக கிராமங்களில் டிஜிட்டல் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு மேம்பட்ட அனுபவம் கிடைப்பதுடன், ஊரக மற்றும் நகர்ப்புற மக்களுக்கு இடையேயான டிஜிட்டல் இடைவெளி குறைக்கப்படும்.
Leave your comments here...