ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ,3 குறைப்பு – இன்று முதல் அமலுக்கு வந்தது. 

தமிழகம்

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ,3 குறைப்பு – இன்று முதல் அமலுக்கு வந்தது. 

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ,3 குறைப்பு – இன்று முதல் அமலுக்கு வந்தது. 

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த 7-ஆம் தேதி 5 கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டாா். அதில் இரண்டாவது அறிவிப்பாக ஆவின் பால் விலை குறைப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த விலை குறைப்பானது, மே 16-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அவா் அறிவித்திருந்தாா். 

அதன்படி, தமிழகம் முழுவதும் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியமானது (ஆவின்) பால் விலையை ஞாயிற்றுக்கிழமை முதல் லிட்டா் ஒன்றுக்கு ரூ. 3 குறைத்து உத்தரவிட்டது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை முதல் ஆவின் பால் விலை குறைப்பு நடைமுறைக்கு வந்தது. 

புதிய விலை நிலவரம்
-‘ஆவின்’ ½ லிட்டர் பச்சை நிற ‘மேஜிக்’ பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.22-க்கு விற்பனை ஆகிறது.
-‘ஆவின்’ ½ லிட்டர் ஆரஞ்சு நிற ‘பிரீமியம்’ பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.24-க்கு விற்பனை ஆகிறது.
-ஆவின்’ ½ லிட்டர் ரோஸ் நிற ‘டயட்’ பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.18.50-க்கு விற்பனை ஆகிறது.
-ஆவின்’ 1 லிட்டர் டீமேட் பாக்கெட் ரூ.3 விலை குறைந்து, ரூ.57-க்கு விற்பனை ஆகிறது.

பால் அட்டை விலை
ஆவின்’ பால் அட்டை அடிப்படையில் விலை குறைப்பு பட்டியல் விவரம் வருமாறு:-
-ஆவின்’ 1 லிட்டர் நீல நிற ‘நைஸ்’ பாக்கெட் ரூ.3 விலை குறைந்து, ரூ.37-க்கு விற்பனை ஆகிறது. ½ லிட்டர் பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.18.50-க்கு விற்பனை ஆகிறது.
-ஆவின்’ ½ லிட்டர் பச்சை நிற ‘மேஜிக்’ பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.21-க்கு விற்பனை ஆகிறது.
-ஆவின்’ ½ லிட்டர் ஆரஞ்சு நிற ‘பிரீமியம்’ பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.23-க்கு விற்பனை ஆகிறது.
-ஆவின்’ ½ லிட்டர் ரோஸ் நிற ‘டயட்’ பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.18-க்கு விற்பனை ஆகிறது.

இதன்மூலம் ஆண்டிற்கு ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சில ஆவின் பால் விற்பனை கடைகளில் விலை குறைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு என்று தான் அரசு தெரிவித்துள்ளது. அரை லிட்டருக்கு ரூ.1.50 குறைப்பு என்று சொல்லவில்லை என்று கடைக்காரர்கள் தெரிவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Leave your comments here...