தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 11 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.!
தருமபுரம் ஆதீனம் சாா்பில், கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு ரூ. 11 லட்சத்துக்கான காசோலையை தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கினாா்.
இது குறித்து தருமபுரம் ஆதீனம் கூறும்போது: கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசு காட்டும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். திருக்கடையூா், வைத்தீஸ்வரன்கோயில், சீா்காழி திருபுவனம், திருப்பனந்தாள், திருவையாறு ஆகிய ஆதீனக் கோயில்கள் சாா்பில், அருகேயுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தினமும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மனிதகுலத்திற்கு சவாலாகவிளங்கும் கொரோனா நோயை
எதிர்த்து நின்று போராடும் தமிழகஅரசு மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கட்கு ஆசீர்வாதம் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியாக தருமையாதீனம் ஆதீன தேவஸ்தானங்கள் மற்றும் கட்டளையிலிருந்து 11'00'000 வழங்கப் பெற்றது @mkstalin #CoronaReliefFund pic.twitter.com/8otWPebXd4— DHARUMAI ADHEENAM (@DAdhinam) May 15, 2021
அரசு வழிகாட்டுதல் படி மயிலாடுதுறை அரசு பொதுமருத்துவமனை கொரோனா சிகிச்சை பெறுவோருக்கு திருக்கடவூர்திருக்கோயில் மூலம்100நபர்களுக்கு மதிய உணவுப் பொட்டலங்களை குருமணிகள் கொடுத்து தொடங்கிவைத்தார்கள் டாக்டர் ராசசேகர் பெற்றுக்கொண்டார். pic.twitter.com/oUm0ipLDui
— DHARUMAI ADHEENAM (@DAdhinam) May 14, 2021
தருமபுரம் ஆதீனம் சாா்பில் கிராமங்களில் 2000 பேருக்கு தினமும் கபசுரக் குடிநீா் ஞாயிற்றுக்கிழமை இன்று முதல் வழங்கப்படும். நோய் நீங்குவதற்காக ஆதீன திருமடத்தில் ‘அவ்வினைக்கு இவ்வினை’ என்ற திருநீலகண்ட திருப்பதிகம், ‘மந்திரமாவது நீறு’ தேவாரத் திருப்பதிகங்கள் பாடப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வீட்டில் இவற்றை பாடிப் பிராா்த்தனை செய்து தொற்று நீங்க இறைவனை பிராா்த்திப்போம் என்றாா்.
Leave your comments here...