இந்தியாவிற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்சிஜன் நிறுவனம் 1350 ஆக்சிஜன் சிலிண்டர்கள் விமானம் மூலம் அனுப்பி வைப்பு..!
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.
Grateful to British Oxygen Company for gift of another 1350 oxygen cylinders that arrived from the UK. This is part of their generous contribution of 5000 oxygen cylinders. pic.twitter.com/QkFlVkMwCm
— Arindam Bagchi (@MEAIndia) May 10, 2021
அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனமான ‘பிரிட்டிஷ் ஆக்சிஜன் கம்பெனி’ இந்தியாவிற்கு 5,000 ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்குவதாக அறிவித்திருந்தது. இதன்படி கடந்த 10 ஆம் தேதி 1,350 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தன. அதனை தொடர்ந்து இன்று 1,200 ஆக்சிஜன் சிலிண்டர்களை அந்நிறுவனம் இந்தியாவிற்கு இன்று அனுப்பி வைத்துள்ளது.
Leave your comments here...