தாய்லாந்து நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலினை வெளியிட்டார் – பிரதமர் மோடி
இந்தியா-ஆசியான் மாநாடு தாய்லாந்தில் 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதைப்போல 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தனி விமானம் மூலம் தாய்லாந்து சென்றடைந்த மோடி அந்நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாங்காக் தேசிய உள்விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.
பின்னர் விழாவில் பிரதமர் மோடி பேச்சை துவக்கியதும், தமிழில் ‘வணக்கம்’, இந்தியில் ‘நமஸ்கார்’ என்று கூறி பேச்சை தொடங்கினார்:- இந்தியா தாய்லாந்து இடையே ஆழமான உறவு உள்ளது. இருநாடுகளும் பொதுவான சிந்தனை உடையவை. தாய்லாந்தில் நான் இப்போது இருப்பதை என் தாய்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. எங்கிருந்தாலும் நீங்கள் இந்தியர்களே! உங்களுடைய கடின உழைப்புக்கும் பங்களிப்புக்கும் என் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா மற்றும் தாய்லாந்து உணர்வுபூர்வமாக இணைந்துள்ளன. உலகில் வாழும் இந்தியர்களின் அன்புக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியர்களாக வாழ்வதில் நாம் பெருமை கொள்வோம்.
பிரதமர் மோடி தமிழில் திருக்குறளை வாசித்தார்.
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. பொருள்: தன் உழைப்பால் சேர்த்த பொருளெல்லாம் தகுதி உடையவர்களுக்கு உதவி செய்வதற்கே என்று திருக்குறளை மேற்கோள் காட்டி அந்த குறளுக்கான பொருளும் கூறினார்.
பின்னர் தொடர்ந்து பேசிய மோடி ஒரு சிலர் நான் பிரதமர் ஆக விரும்பவில்லை, இருப்பினும் யார் நாட்டுக்காக உழைப்பவர்கள் என்று அறிந்த பெரும்பாலானோர் என்னை பிரதமராக்கி உள்ளனர். 130 கோடி இந்தியர்கள் ஓன்று சேர்ந்து புதிய இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருவோம். இந்தியாவின் வளர்ச்சிக்காக மக்கள் என்னை மீண்டும் பிரதமராக்கி உள்ளனர். 2019 தேர்தலில் 60 கோடி பேர் ஓட்டளித்துள்ளனர். அதில் அதிக பெண்கள் ஓட்டளித்துள்ளனர், இது வரலாற்று சிறப்பு மிக்கது. இந்தியாவில்பெண்கள் சிரமமின்றி, புகையில்லாத சமையல் செய்வதற்கு எட்டுக்கோடிக்கும் மேலாக இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து இந்தியர்களையும் வங்கிகளுடன் இணைத்துள்ளோம்
Leave your comments here...