கொரோனா மருத்துமனை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்.!

தமிழகம்

கொரோனா மருத்துமனை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்.!

கொரோனா மருத்துமனை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்.!

கொரோனா முன்கள பணியாளர்களை காவல்துறையை சேர்ந்த நபர் தரக்குறைவாக பேசியதாக கூறி கொரோனா மருத்துமனை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் இன்று காலை முதல் ஏராளமான தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காவலர் ஒருவரின் உறவினர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்து வந்துள்ளார்.அனுமதி சீட்டை வழங்க அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த பணியாளர்கள் நீண்ட நேரம் காவலரை காக்க வைத்ததாக கூறி ஆத்திரமடைந்த காவலர் அங்கு இருந்த பெண் ஒப்பந்த பணியாளரை தரக்குறைவாக பேசியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சக முன்கள பணியாளர்களான ஒப்பந்த பணியாளர்கள் காவலரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொடர்ந்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.தொடர்ந்து அவர்களிடம் ஒப்பந்த பணியாளர்களின் காவல்துறையினர் மற்றும் மேற்பார்வையாளர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தங்களது பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக நோயாளிகள் அனுமதி கிடைக்காமல் அவதிக்குள்ளானார்.

Leave your comments here...