கூடலூர் ஸ்ரீ காளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா.!

ஆன்மிகம்

கூடலூர் ஸ்ரீ காளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா.!

கூடலூர் ஸ்ரீ காளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா.!

மேலக்கூடலூர் வ.உ.சி., தெருவில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா கொரோனா விதிகளை பின்பற்றி நடத்தப்பட்டது.2 நாட்கள் நடைபெற்ற திருவிழா, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முதல் நாளன்று கோயில் பூசாரிகள், நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் ராஜா கிணறு எனப்படும் நல்ல தண்ணீர் கிணற்றுக்கு சென்று, கரகத்தில் அம்பிகையை ஜோடித்து எடுத்து வந்தனர்.

பின்னர் பெண்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் அம்பிகையை வழிபட்டனர் .
விழாவையொட்டி, காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. மஞ்சள் நீராட்டு வைபவமும் நடைபெற்றது.

அதன் பின்னர் பெண்கள் முளைப்பாரியை சமூக இடைவெளி உடன் எடுத்துச் சென்று குளத்தில் கரைத்தனர். பின்னர் அம்பிகை சிலை, முல்லை பெரியாற்றில் கரைக்கப்பட்டது. வ.உ.சி., வெள்ளாளப் பெருமக்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் விழாவுக்கான ஏற்பாட்டை செய்தனர்

Leave your comments here...