தேவைக்கேற்ப ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும்: இந்திய ரயில்வே அறிவிப்பு.!
தேவைக்கேற்ப , ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.தற்போது சராசரியாக நாள் ஒன்றுக்கு, 1402 சிறப்பு ரயில்களை, இந்திய ரயில்வே இயக்குகிறது. மொத்தம் 5381 புறநகர் ரயில்கள் மற்றும் 830 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது தவிர 28 சிறப்பு ரயில்கள், பயணிகளின் அதிக ஆதரவுடன் இயக்கப்படுகின்றன. பல ரயில்வே மண்டலங்களில் கூட்டத்தை சமாளிக்க ஏப்ரல்-மே மாதங்களில் கூடுதல் ரயில்களும் இயக்கப்படுகின்றன. கோரக்பூர், பாட்னா, தர்பங்கா, வாரணாசி, குவஹாத்தி, பராவ்ணி, பிரயாக்ராஜ், பகோரா, ராஞ்சி மற்றும் லக்னோ உள்பட பல இடங்களுக்கு மக்கள் வேண்டுகோள்படி கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
2020-21 ஆம் நிதியாண்டில், மிக அதிக அளவாக 1232.64 மில்லியன் டன்கள் சரக்குகளை இந்திய ரயில்வே கொண்டு சென்றுள்ளது. ரயில்வேயின் 2020-21 ஆம் நிதியாண்டின் சரக்கு வருமானம் ரூ.1,17,386 கோடி. இது கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் ரூ.1,13,897 கோடியாக இருந்தது.
சரக்கு ரயில்களின் வேகத்தையும் மணிக்கு 24 கி.மீ என்ற அளவிலிருந்து மணிக்கு 44 கி.மீட்டராக இந்திய ரயில்வே அதிகரித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 450 கிசான் ரயில்கள் இயக்கப்பட்டு. 1.45 டன் வேளாண் பொருட்கள் பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
Leave your comments here...