பெட்ரோல், டீசல் விலை வரும் நாட்களில் மேலும் குறையும் – மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்.!
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த நிலையில், இந்தியாவில் ஜனவரி மாதத்தில் இருந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்ந்து வந்தது. மார்ச் இறுதியில் விலை உயர்வு ஓரளவு கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை இப்போது குறைய துவங்கியுள்ளன. வரும் நாட்களில் மேலும் குறையும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவதால் கிடைக்கும் பயனை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கச் செய்வோம் என நாங்கள் ஏற்கனவே தெரிவித்து இருந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...