பயணிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் : கோவை பேருந்து நடத்துனர் மாரிமுத்துக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வாழ்த்து.!
- March 28, 2021
- jananesan
- : 1094
- மன் கி பாத்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல், ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இதன்படி 75-வது முறையாக இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- கிறித்துவர்களுக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார், “இந்தக் காலத்தில் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி ஈஸ்டரும் கொண்டாடப்படும். ஏசு கிறிஸ்து மரித்தெழுந்த நாள் என்ற வகையிலே ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை அடையாளப்படுத்திச் சொன்னால், ஈஸ்டர் என்பது வாழ்க்கையின் புதிய தொடக்கத்தோடு இணைந்தது எனலாம். ஈஸ்டர் எதிர்பார்ப்புக்களுக்கான, மறுவாழ்வுக்கான அடையாளம். இந்தப் புனிதமான, மங்கலமான தருணத்தை முன்னிட்டு, நான் இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு மட்டுமல்லாது, உலக கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். ” என்றார் பிரதமர் மோடி.
Today is the 75th episode of #MannKiBaat. Tune in. https://t.co/CAKlYUrGHL
— Narendra Modi (@narendramodi) March 28, 2021
75-வது சுதந்திர கொண்டாட்டங்கள் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. சுதந்திரத்திற்கான போராட்டத்தில், நமது விடுதலை போராட்ட வீரர்கள் எண்ணற்ற கஷ்டங்களுக்கு உள்ளாகினர். ஏனெனில் நாட்டின் நலனுக்காக தியாகம் செய்வது தங்கள் கடமையாக அவர்கள் கருதினர். சமீபத்தில் இந்திய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். அவரது சாதனைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பெண்கள் தினம் கொண்டாடப்படும் மார்ச் மாதத்தில் விளையாட்டுத்துறையில் நிறைய பெண் வீராங்கணைகள் பல்வேறு விருதுகளையும், சாதனைகளையும் படைத்துள்ளனர். டெல்லியில் நடந்த உலக துப்பாக்கிச்சூடுதல் போட்டியில் இந்தியா முதல் நிலையை பெற்றுள்ளது. தங்கம் பெற்ற நாடுகள் வரிசையில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
கோயம்புத்தூரை சேர்ந்த பஸ் நடத்துனர் மாரிமுத்து யோகநாதன் பஸ் பயணிகளுக்கு பயண சீட்டுடன் சேர்த்து இலவசமாக மரக்கன்று வழங்கி வருகிறார். அவர் தனது பெரும்பாலான வருமானத்தை இதற்காக செலவிட்டு வருகிறார். மாரிமுத்து யோகநாதனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது முயற்சிக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Leave your comments here...