அமெரிக்க அரசு திருநங்கை ஒருவருக்கு முக்கியப் பதவி – ஜோ பைடனுக்கு குவியும் பாராட்டு.!

இந்தியா

அமெரிக்க அரசு திருநங்கை ஒருவருக்கு முக்கியப் பதவி – ஜோ பைடனுக்கு குவியும் பாராட்டு.!

அமெரிக்க அரசு திருநங்கை ஒருவருக்கு முக்கியப் பதவி – ஜோ பைடனுக்கு குவியும் பாராட்டு.!

கடந்த ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் சுகாதாரத்துறை துணை செயலாளராக ரேச்சல் லெவின் என்ற திருநங்கை பதவியேற்றுள்ளார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு பெரிய பதவி வழங்கப்பட்டது. தற்போது அதிக வரவேற்பை பெற்றுள்ளது.மூத்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ரேச்சல், முன்னதாக பென்சில்வேனியா மாகாணத்தில் சுகாதாரத் துறை செயலாளராகப் பதவி வகித்து குறிப்பிடத்தக்கது.ரேச்சல் ஜோ பைடனின் ஆலோசகராக நியமிக்கப்பட நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இவர்களில் 48 பேர் ரேச்சல் ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது திருநங்கைகள் அரசியல், சினிமா, தொழில்துறை உள்ளிட்ட பல துறைகளில் சாதிக்கத் துவங்கிவிட்டனர். இந்நிலையில் அமெரிக்க அரசு திருநங்கை ஒருவருக்கு மிக முக்கிய பதவி வழங்கியது பல்வேறு நாடுகள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...