இந்தியா வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி தனுஷ்கோடியில் சந்திக்க உள்ளதாக தகவல்

இந்தியாஉலகம்

இந்தியா வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி தனுஷ்கோடியில் சந்திக்க உள்ளதாக தகவல்

இந்தியா வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி தனுஷ்கோடியில் சந்திக்க உள்ளதாக தகவல்

பிரதமர் மோடி பதவியேற்றது முதல் வெளிநாடுகளுடன் தொடர்ந்து நட்புறவு பாராட்டி வருகிறார். சீனாவுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், 2019 அக்.,11ல் அதன் அதிபர் ஷீ ஜின்பிங்கை தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கு வரவழைத்து கலை,கலாசாரத்தை விளக்கி அசத்தினார்.

இதன் பிறகு மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜான்சன், கடந்த குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அவரும் வரவிருந்த நிலையில், அந்நாட்டில் உருமாறிய கொரோனா பரவலால் பயணத்தை ரத்து செய்தார்.

இந்நிலையில் ஏப்., கடைசி வாரம் அவர்இந்தியா வரவுள்ளார். அவரை ஏப்.,26ம் தேதி தனுஷ்கோடிக்கு அழைத்து வர பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.சிறப்பு விமானத்தில் மதுரை வரும் பிரிட்டன் பிரதமர், ெஹலிகாப்டரில் உச்சிப்புளி செல்கிறார். அங்கிருந்து காரில் தனுஷ்கோடி செல்கிறார். அங்கு பழமையான புயல் பாதிப்பு கட்டடங்கள், ராமாயண புராணத்திற்கும், ராமேஸ்வரத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்து மோடி விளக்க உள்ளார்.

இதை உறுதி செய்யும் வகையில் பிரிட்டன் உளவுத்துறை அதிகாரிகள் மதுரை, தனுஷ்கோடியில் களஆய்வு செய்துள்ளனர். மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடமும் ஆலோசித்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏப்.,26ல் மதுரை வழியாக தனுஷ்கோடி செல்வதாக தெரிவித்துள்ளனர். மதுரையில் அவர் ஓய்வு எடுக்கும் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. மதுரையில் உள்ள பாரம்பரிய இடங்களை பார்வையிடுகிறாரா என்று உறுதி செய்யப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர். எனவே ஏப்.,26க்குள் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே அவர் வருகை உறுதிசெய்யப்படும் என பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்தனர், என்றார்.

Leave your comments here...