பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் – ஐ.நா.மாநாட்டில் ஸ்மிருதி இரானி பேச்சு
- March 21, 2021
- jananesan
- : 1365
- Smritiirani

பெண்களின் நிலை தொடர்பான ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வின் பொது விவாதத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:- உலகம் எங்கும் உள்ள பெண்கள் மற்றும் எங்கள் மகள்களுக்கு கொரோனா பரவலுக்கு பிந்தைய காலத்தில் மிகவும் நியாயமான மற்றும் சமமான உலகை கட்டமைப்பது என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியுடன் உள்ளது.பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் வழங்குதலை மேம்படுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது.
📺Watch:
Minister @smritiirani delivers India’s national statement at #CSW65
✅Highlighted 🇮🇳’s flagship programmes for gender equality & women empowerment and initiatives taken to ensure their full and effective participation and decision-making in public life. pic.twitter.com/b7ZEDR7IuQ
— India at UN, NY (@IndiaUNNewYork) March 19, 2021
பெண்களுக்கு வேலைவாய்ப்பு, சுய வேலைவாய்ப்பு சுகாதாரம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு மற்றும் கல்விக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்காக முதன்மையான திட்டங்களை இந்தியாவில் நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவில் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டங்களில் பெண்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...