எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ராஜ்யசபாவில் நிறைவேறியது இன்சூரன்ஸ் மசோதா.!

இந்தியா

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ராஜ்யசபாவில் நிறைவேறியது இன்சூரன்ஸ் மசோதா.!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ராஜ்யசபாவில் நிறைவேறியது இன்சூரன்ஸ் மசோதா.!

காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை தொடர்ந்து 4 முறை ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை, 49 சதவீதத்தில் இருந்து, 74 சதவீதமாக உயர்த்தும் மசோதாவை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

இதன் மீதான விவாதத்தில் பல்வேறு கட்சி எம்பி.க்கள் பங்கேற்றனர். மாநிலங்களவை காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், `காப்பீட்டு சட்டம் 1938ல் இதுவரை 3 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. முதல் முறையாக, வாஜ்பாய் பிரதமராக இருந்த போது காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26%, 2வதாக 2015ம் ஆண்டில் 49%, 3வதாக தற்போது 74% ஆக உயர்த்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். இந்த மசோதா நன்கு ஆராயப்பட வேண்டும். எனவே, இதனை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்,’’ என்றார்.

மசோதாவை தாக்கல் செய்து,நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- கடந்த, 2015ல், இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டு உச்ச வரம்பு, 24 சதவீதத்தில் இருந்து, 49 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன் மூலம், 26 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு கிடைத்து உள்ளது. தற்போது, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மூலதன நிதிச் சிக்கலில் உள்ளன. ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனப் படும், இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணையம் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை செய்த பிறகே, அன்னிய நேரடி முதலீடு உச்ச வரம்பு, 74 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.இதன்பின், குரல் ஓட்டெடுப்பு வாயிலாக மசோதா நிறைவேற்றப்பட்டது.

ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின்போது, நிர்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது: வங்கி மோசடி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு, வெளிநாடு தப்பிய, தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹூல் சோக்சி ஆகியோரை நாடு கடத்தி வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. விரைவில் அவர்கள், இந்திய சட்ட விசாரணையை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பி.க்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

Leave your comments here...