பங்குனி மாத பூஜையை தொடர்ந்து சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆறாட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.!
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து மற்ற நாட்களில் சிறப்பு பூஜைகள், படி பூஜை போன்றவை நடந்தன.
மாத பூஜையின் தொடர்ச்சியாக ஆறாட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று சன்னிதானத்தில் தந்திரி தலைமையில் சுத்திகிரியை பூஜை நடந்தது.
Kerala: Sabarimala Temple opened for the 'Uthram festival' today morning. The temple will be open for devotees till 28th March. COVID19 negative certificate is mandatory for devotees visiting the temple pic.twitter.com/OwVO603VPm
— ANI (@ANI) March 19, 2021
திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இன்று காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து 28-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.விழா நாட்களில் தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
Leave your comments here...